சிறுவர் இலக்கியம் இளம் தலைமுறைக்கு என்ன சொல்கிறது
சிறுவர் இலக்கியம் சரிவர அமைந்து விட்டால் நாளைய நம் நாடு பொறுப்புவாய்ந்த பெருந்தலைவர்களை கொண்ட நாடாக மாறிவிடும்.
டி.எஸ்.சேனநாயக்காவின் காலத்திலிருந்தே இனவாத கருத்துக்களை சிங்கள இளம் சமூகத்தினர் மத்தியில் விதைத்து வளர்த்ததான கருத்துக்கள் பல்வேறு தமிழ் தரப்புக்களாளும் பேசப்படுகின்றன.
இது தீர்வில்லாது நீண்டு செல்லும் இனப்பிரச்சினையைத் தொடர்ந்து காவிச் செல்வதில் பெரும் பங்கு வகிக்கின்றதான கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
மாறிவரும் சிங்கள இளம் தலைமுறை இன்றைய இளைய சிங்களத் தலைமுறையினர் அறிவியல் சார்ந்து சிந்திக்கப்பழகி விட்டனர்.
லஹிரு வீரசேகரவின் கண்டனம்
அதன் ஒரு வெளிப்பாடே கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் அவர்கள் காட்டிய ஈடுபாடு உணர்த்தி நிற்கின்றது.
தமிழரோடு இணைந்து வாழும் போக்கும் அவர்களது போராட்டங்களின் நியாயங்களும் புரிந்துகொள்ளப்படுகின்றது. இது தமிழருக்கு சாதகமான மாற்றமாகும்.
திருகோணமலையில் வைத்து தியாகி திலீபனின் நினைவு ஊர்தி பவணியை தாக்கியதனையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டதையும் கண்டிக்குமளவுக்கு மாற்றங்களை தந்திருக்கிறது.
லஹிரு வீரசேகரவின் கண்டனம் நோக்க வேண்டியதொன்று. காலி முகத்திடலில் நடைபெற்ற கோட்டா கோகம ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான லஹிரு வீரசேகர தனது கண்டனத்தை சமூகவலைத்தளமான முகநூலில் 18 நண்பர்களோடு இணைந்து பகிர்ந்துள்ளமையை இங்கு நோக்கவேண்டிய விடயமாகும்.
ஈழத்து இளம் தலைமுறையினருக்கு எதிர்காலத்தை அறிவு நோக்கோடு சிந்திக்கப் பழக்கும் இலக்கியங்களூடாக கற்றலை முன்னெடுக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் எடுத்தாளும் கருத்தாக்கம்
அம்மாக் கோழியும் அப்பாச் சேவலும் செ. அன்புராசா அடிகளாரின் சிந்தையில் தோன்றிய சிறுவர் கதை நூல்.
படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் இலகுவானது. அருமையான விரும்பத் தகுந்த புதிய படைப்பாக இது காணப்படுகிறது.
இந்த நூலில் உள்ள படங்கள் கோழி என்ற பறவையை கொண்டு மனித வாழ்வை சொல்வதை நிதர்சனமாக்க மனித வாழ்விடங்கள் போல காட்டியது மிகவும் பொருத்தமானது.
பேச வந்ததை தெளிவாக்குவதில் வெற்றி நோக்கி நகர வைக்கிறது. கதையின் கருவாக ஆசிரியர் எடுத்தாளும் கருத்தாக்கம் கோழியும் குஞ்சுகளையும் கொண்டு சிறுவர் செயல்களை சீர் செய்யும் வகையில் கதையை நகர்த்தியுள்ளார்.
கதைச் சுருக்கம் கோழிக்கு பத்துக் குஞ்சுகள்.அம்மாக் கோழியும் குஞ்சுகளும் வீட்டில் வாழ்ந்து வந்தன. அம்மாக் கோழி உணவைத் தேடி வந்து குஞ்சுகளுக்கு உணவூட்டும்.
குஞ்சுகளின் பாதுகாப்புக்காக அம்மாக்கோழி அவற்றுக்கு அறிவுரை கூறும். குஞ்சுகள் சற்றே வளர்ந்த பிறகு சொல்லி விட்டு வெளியில் சென்று வர அனுமதிக்கிறது.
கதையின் போக்கு
இவ்வாறிருக்கும் போது அம்மாக்கோழி உணவு தேடச் செல்லும் வேளை இரண்டு குஞ்சுகள் அம்மாக் கோழிக்குச் சொல்லாமல் வெளியே சென்று வரப் பழகி விட்டன. இதனை பருந்தாரும் பூனையாரும் பாம்பாரும் அவதானித்தவாறு இருந்தனர்.
ஒரு நாள் பருந்தார் பறந்து வட்டமிடுவதை அவதானித்த அம்மாக் கோழி உணவு தேடுவதை விட்டு வீட்டுக்கு திரும்புகிறது. வீட்டில் இரண்டு குஞ்சுகளைக் காணாது தவித்து. மற்றைய குஞ்சுகளை வீட்டில் இருக்க விட்டு, தனது இரண்டு குஞ்சுகளையும் தேட புறப்பட்டது.
பருந்தாரை அவதானித்த அம்மாக்கோழி குஞ்சுகள் இரண்டையும் கண்டறிந்து கூட்டி வந்து கொண்டு இருக்க, வீட்டில் உள்ள குஞ்சுகள் அம்மாக்கோழியையும் இரண்டு குஞ்சுகளையும் காணாது பயந்து வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தவாறு இருக்கின்றன.
அப்போது அந்தப் பக்கமாக பாம்பார் வருகிறார். அவரைக் கண்ட ஒரு குஞ்சு "கீச் கீச்" என்று சத்தம் போடுகிறது. அந்தச் சத்தம் கேட்டு அப்பாச் சேவல் அயல் வீட்டிலிருந்து ஓடிவந்து பாம்பை துரத்தி குஞ்சுகளைக் காக்க அம்மாக்கோழியும் இரண்டு குஞ்சுகளும் வந்து விடுகின்றன.
அம்மாக்கோழியின் அன்பிலும் அப்பாச் சேவலின் பாதுகாப்பிலும் வளர்கின்றன என்று கதையை முடிக்கின்றார்.
கதையின் போக்கு கதையை கொண்டு சென்ற முறை நன்று. சிறுவர்களுக்கு கதை சுவாரசியமாக இருக்கும். விரும்பிப் படிக்கும் வகை கதை இலகுவாக விரைவாக நகர்ந்து செல்கிறது. பெரியவர்களும் படித்து பயன் பெறக்கூடியதாகவும் நிறைந்த பொருள் செறிவுடையதாக உள்ளது.
சொல்லை கேட்டு நடத்தல் மற்றும் பாதுகாப்பாக வாழல் என்ற சிந்தனையை தட்டிவிட முயலும் வேளை குடும்பம், அன்பு என்பவற்றையும் சொல்லிச் செல்வது நன்றாகவே உள்ளது.
இன்றைய சமுகத்திற்கு தேவையான நூலாக அது காணப்படுகிறது. பயன்பாட்டுக்கான சந்தர்ப்பங்கள் நூலின் கட்டமைப்பு, கையாளல் இலகு, நூல் வடிவமைப்பு என்பனவும் திருப்தியளிக்கின்றது.
ஒரு புதிய படைப்பாக வெளிவரும் நூல், தான் பேச வந்த விடயத்தை வாசகரிடையே கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காக இந்த நூலை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
கல்வி அணுகல்
இலகுவாக நூலை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் ஆக்கப்பட வேண்டும். இந்த விடயம் தனியே நூலாசிரியரிடம் மட்டுமன்றி சமுகத்தினை சார்ந்தோரது கடமையும் கூட.
நூலாசிரியர் நூலினுடாக பேச வந்த விடயங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஊடகமாக நூல்களை நோக்கின் அவ் நூலும் மக்களிடையே சென்று சேரும் வகையையும் கருத்திலெடுக்க வேண்டும்.
நல்ல படைப்புக்கள் ஏட்டோடு மட்டும் இருந்து விடுவதால் பயனற்றுப் போய் விடுகின்றன. அவை மக்கள் மனங்களை சென்றடைய வேண்டும். அறிவியல் நோக்கில் எப்படி கதையினை அறிவியல் மற்றும் சமூக தீர்க்கதரிசனத்தோடு நோக்கும் போது தோற்றுப் போய் விடும் என்பதிலும் ஐயமில்லை.
கோழி என்பது இனத்தைக் குறிக்கும் சொல். பேடு பெண் கோழியையும் சேவல் ஆண் கோழியையும் குறித்து நிற்கின்றது. இங்கு "அம்மா கோழி" என்பதால் கோழி என்ற சொல் பெண் கோழியை குறிப்பதாக கையாளப்படுகிறது. ஆனால் "அப்பாச் சேவல்" என்பது முதல் தலைப்பிலிருந்து அமைப்பு அடிப்படையில் வேறுபடுகிறது.
இது மொழியை வளமிழக்க வைக்கும். இருந்த போதும் பேச்சு இலகுவிற்கு மிகவும் அழகானது. படிப்பது ஒன்று. நடைமுறை மற்றொன்று என வாழும் இலங்கை போன்ற நாட்டின் கல்வி அணுகலை தன் நூலிலும் ஆசிரியர் வெளிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு பறவைகளும் ஒவ்வொரு வித வாழ்க்கைக் கோலத்தைக் கொண்டுள்ளன. கோழி என்ற பறவையினம் தரை வாழ்வுக்கு இசைவாக்கமுடையது. தரையிலேயே பாதுகாப்பான இடமொன்றை தேர்வுக்குள்ளாக்கி முட்டையிடும். கூடு கட்டுவதில்லை.
முட்டை இயற்கை காரணிகளால் பாதிக்கப்படாதிருப்பதோடு எதிரிகளால் கவரப்படாமலும் இருப்பதை கருதி செயற்படும். அடைகாப்பது முதல் உணவு தேடுவதும், குஞ்சுகளை பராமரித்து வளர்ப்பதும், வளர்ந்த பின்னர் குஞ்சுகளை தன்னிடம் இருந்து பிரித்து தனித்து வாழப் பழக்குவது வரை அம்மாக் கோழியே.
தன்னிறைவு சமூகம்
அதாவது பேட்டுக்கோழி. சிட்டுக் குருவி போல உணவை தேடி எடுத்து வந்து குஞ்சுகளுக்கு ஊட்டும் இயல்பு அற்றவை. தன்னுடன் குஞ்சுகளை கூட்டிச் செல்லும் இயல்புடையது.
கோழிக்கு வாழும் நிரந்தர கூடுகள் இல்லை. இவை கூடு கட்டி வாழும் பறவையினம் இல்லை. மனிதர்கள் கோழிகளை வளர்க்கும் போது பாதுகாக்க கூடுகளை அமைக்கின்றனர்.
இந்த இயல்புகளை கருத்திலெடுக்கத் தவறியமை இந்த நூலின் நின்று நிலைக்கும் இயல்பை இல்லாது செய்து விடும்.
அம்மா கோழி, குஞ்சுகளை வீட்டில் விட்டு செல்கிறது. என்ற கூற்று நடைமுறையற்றது. கோழி குஞ்சுகளை தன்னுடனே கூட்டிச் செல்வதை அவதானித்த இளையவர் இந்த நூலின் வழி எதை கற்றுக்கொள்ளப் போகிறார்கள்.
இந்த கதை அத்தகைய இளையவரின் சூழல் அவதானிப்புக்களை பொய்யாக்கி நிற்காதோ? கோழி உணவுள்ள இடத்தை இனம் கண்டு அந்த இடத்தை கிளறி சத்தமிட்டு குஞ்சுகளை அழைத்து உண்ணப் பழக்கும். உணவு தேடப் பழக்கும்.
இந்த நடைமுறைக்கு மாறாக குஞ்சுகள் வீட்டில் பாதுகாப்பான முறையில் இருக்க விட்டு, தான் உணவு தேடி கொண்டு வந்து கொடுக்கும் என்பது உண்மைக்கு மாறானது.
இவ்வாறான இயல்பை கிளி, சிட்டுக்குருவி,புறா போன்ற கூடமைத்து வாழும் பறவைகளின் செயற்பாடு. இரண்டையும் கலந்து விபரிப்பதானது உண்மைகளை அல்லது சரியானதை கற்றுக் கொடுக்கத் தவறிடுகின்றது.
தவறான அணுகலை இளையவரிடம் பழக்கப்படுத்தி விட்டால் அவர்கள் பெரியவரகிய பின் தவறான செயல்களையே ஆற்றுவதற்கு இயலுமானவர்களாக வளர்ந்து விடுவார்கள்.
இது குற்றங்கள் அதிகரித்துச் செல்ல காரணமாவதோடு அந்த சமுகம் தன்னிறைவை பெறாது வறுமை கூடி கூத்தாடும்.
அம்மாக்கோழியையும் இரண்டு குஞ்சுகளையும் காணாது பயந்து நின்ற ஏனைய குஞ்சுகள், வீட்டை விட்டு வெளியே வந்து நிற்கின்றன.
நிச்சயமாக கோழி குஞ்சுகளை விட்டு நீண்ட தூரம் சென்று நீண்ட நேரம் கழித்து வரும் இயல்பு அற்றது. சொன்னது போல கூடுகட்டி வாழும் பறவைகளின் இயல்புகளை பொருத்தியது பொருத்தம் அற்றது.
இந்த இடத்தில் பாம்பு ஒன்று வந்ததைக் கண்டு ஒரு குஞ்சு கத்தியது.அது கேட்டு அப்பாச் சேவல் அயல் வீட்டிலிருந்து ஓடி வந்தது. கவனிக்க வேண்டிய விடயம். இரண்டு குஞ்சுகளை காணவில்லை.
சிறுவர் இலக்கியத்தின் பொறுப்பு
அம்மா கோழி தேடப் போயுள்ளது.ஏனைய குஞ்சுகள் வீட்டில் தனியாக உள்ள போது அப்பாச் சேவலுக்கு என்ன வேலை அயல் வீட்டில். அம்மா கோழி உணவு தேடப் போக அப்பாச் சேவல் என்ன செய்கிறது?
அப்பாவின் பாதுகாப்பு என்றால் அது சரியாக இருந்தால் இரண்டு குஞ்சுகள் எப்படி தெரியாமல் போகப் பழகியது. நடைமுறை வாழ்க்கையில் மனிதரிடையே இது இயல்பாக இருந்தாலும் சிறுவர்களுக்கு இது புது விடயம்.
பொறுப்பற்ற அப்பாக்கள் அம்மா உழைத்துப் பார்க்க அப்பா என்ன செய்து கொண்டு இருப்பார்.வளர்ந்து வரும் ஆண் இளையவர்களுக்கு இந்த அணுகுமுறை ஆண்கள் பொறுப்பை சுமக்கும் தேவையில்லை என்றுரைக்க முற்படுகிறது.
அம்மா உணவு தேடி, அப்பா பாதுகாப்பு கொடுக்க என்று சொல்லி விட்டு, குஞ்சுகளை காக்க அம்மா தானே ஓடுகிறார். அம்மாக் கோழி பருந்தாரை அவதானித்தளவுக்கு அப்பாச் சேவலால் அவதானிக்க முடியவில்லை.
அம்மாக் கோழிக்கு அப்பாச் சேவல் பாதுக்காக்க இருக்கின்றது என்ற ஆறுதல் உணர்வு கூட இல்லையே என்பதை இந்த கதை வெளிப்படுத்துகிறது.
ஆறுதல் உணர்வை கொடுத்து வாழ முடியாத அப்பா எதற்கு? நாளை அப்பாக்களாகக் கூடிய இன்றைய இளம் ஆண்களுக்கு பொறுப்புக்களை ஊட்டி வளர்த்தால் நாளைய சமுகத்தில் குடும்ப பிணக்குகள்,குடும்ப முறிவுகள், வன்முறைகள், இளம் பிள்ளைகள் அநாதையாதல், வயோதிப பெற்றோர்கள் அநாதையாதல் என்ற சிக்கல்கள் தோன்றாது.
சிறுவர் இலக்கியத்தின் பொறுப்பு இவை போல நிறைந்த விடயங்களை நோக்கலாம். ஆராயலாம்.
சிறுவர் படைப்புக்களை ஆக்கும் போது நாளைய சமூக சுமூக நிலையை கருத்திலெடுப்பதுடன் இயற்கையை உற்று நோக்கி வாழும் பாங்கை எடுத்தியம்பல் அவசியம்.
இயற்கையோடு இசைந்து வாழல் மட்டுமே இயங்கு நிலையை தொடர்ந்து பேண உதவும்.
ஆசிரியரது தற்குறிப்பேற்ற சிந்தனை நன்றாயினும் சிறிது மாற்றம் காணுமாயின் இன்னும் அதிக பயன்களை இளையவர்கள் பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும். நிச்சயமாக இன்றைய வாழும் சூழலில் ஆசிரியரது இந்த படைப்பு தலைவணங்கி நின்று போக வைக்கிறது.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
