பாடசாலை மாணவனை தகாத செயலுக்கு உட்படுத்திய பெண் கைது
பாடசாலை மாணவனை தகாத செயலுக்கு உட்படுத்திய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டி கந்தக்குளிய வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான பெண் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தப் பெண் குறித்த சிறுவனை பாரதூரமான முறையில் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
வேறும் ஒர் பகுதியில் கற்கும் மாணவன், விடுமுறைக்காக இந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றிருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

14 வயதான பாடசாலைச் சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தகாத செயற்பாட்டுக்கு உள்ளான சிறுவன், அந்தப் பெண்ணின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri