உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாபத்துறை கடற்கரையில் இன்று காலை உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் நேற்று மன்னார் வங்காலை கடற்கரை மற்றும் சிலாபத்துறை கடற் கரையில் கரையொதுங்கியது.
இந்த நிலையில் அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். சிறிய உருண்டைகள் கடற்கரையோரங்கள் முழுவதிலும் சிதறிய நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இதனை குறித்த பிரதேச மக்களும், மீனவர்களும் பார்த்துள்ளதோடு, உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த கடற்கரையிலும் சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் கடற்கரையோரங்கள் முழுவதிலும் சிதரிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri