மட்டக்களப்பில் கரப்பான் பூச்சியுடன் உணவு பொதி விநியோகம்: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
மட்டக்களப்பில் கரப்பான் பூச்சியுடன் கோழி பிரியாணி உணவு பொதியை விநியோகம் செய்த குற்றத்திற்காக பிரபல உணவம் ஒன்றின் உரிமையாளருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போல், 10 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு நேற்று(8) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தாதியர்களின் முறைப்பாடு
கடந்த மாதம் 30 ம் திகதி மட்டு. போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றி வரும் தாதியர்கள் விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழி பிரியாணியை வாங்கிச் சென்று அதனை உண்ணுவதற்காக திறந்த போது ஒருவரின் சாப்பாடு பொதியில் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் பூச்சியும் பொரித்த நிலையில் இருந்துள்ளது.
இதனையடுத்து தாதியர்கள், மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு, முறைப்பாடு செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன் உணவக உரிமையாளரை கைது செய்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போல் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போதே கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபா
அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
