செம்மணியில் புதையுண்டு இருக்கும் தமிழர்களின் பெருந்துயரம்.. பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்துள்ள கோரிக்கை

Sri Lankan Tamils Jaffna United Kingdom chemmani mass graves jaffna
By Sajithra Jun 11, 2025 10:42 PM GMT
Report

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் தோண்டப்பட்ட விடயமும், தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் அவலநிலை ஆகியனவும், சர்வதேசத்தின் கவனத்தை அவசரமாகக் கோருகின்றன என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. 

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கைக்கான பயணமும் செம்மணி புதைகுழி தோண்டப்பட்டதன் முக்கியத்துவமும் என்ற தலைப்பில் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில்,"ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் விஜயமானது உண்மை மற்றும் நீதிக்கான எமது தேடலின் ஒரு திருப்புமுனையாக அமைவதுடன், எதிர்வரும் செப்டெம்பர் மாத ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில், நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கு வழிவகுக்குமென நாம் நம்புகிறோம்.”

2025, ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் (Mr Volker Turk), இலங்கைக்கு விஜயம் செய்ய இருக்கிறார்.

உலகை மிரள வைக்கும் இப்ராஹிம் ட்ரொரே! பலரையும் வியக்க வைத்த தமிழ் தேசியத் தலைவர்

உலகை மிரள வைக்கும் இப்ராஹிம் ட்ரொரே! பலரையும் வியக்க வைத்த தமிழ் தேசியத் தலைவர்

ஐ.நா அதிகாரியின் வருகை

இதன் இன்றியமையாத முக்கியத்துவத்தை பிரித்தானிய தமிழர் பேரவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாகும்.

செம்மணியில் புதையுண்டு இருக்கும் தமிழர்களின் பெருந்துயரம்.. பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்துள்ள கோரிக்கை | Chemmani Mass Grave Uk Tamil Forum

மேலும், வடகிழக்கு பிராந்தியங்களில், குறிப்பாக திருகோணமலை, செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்களைக் காணவும், அவற்றை நிவர்த்தி செய்யவும் இது ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது.

செம்மணியில் புதையுண்டு இருக்கும் தமிழர்களின் பெருந்துயரம்.. பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்துள்ள கோரிக்கை | Chemmani Mass Grave Uk Tamil Forum

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் A/HRC/46/1, A/HRC/51/1 மற்றும் A/HRC/57/1 தீர்மானங்களுக்கு இணங்க அதன் கட்டாய விதிகளை (mandatory provisions) பலப்படுத்துவதற்காக, ஐ.நா. இன் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு (OSLAP) பிரித்தானியா தமிழர் பேரவையினால் தாக்கல் செய்யப்பட்ட முக்கியமான அடையாள வழக்குகளிற்கான (Emblematic cases) சாட்சிய கோப்புகளில் செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் “கிருஷாந்தி குமாரசாமி கொலை” ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மனித உரிமை ஆணைக் குழு உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க், ஜூன் மாதத்தில் 3 நாட்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பதையும், அத்துடன் அவர் தமிழர்களின் தாயகமான திருகோணமலைக்கு மட்டுமே செல்லவுள்ளார் என்பதையும் அறிந்தவுடனே பிரித்தானியா தமிழர் பேரவை, 27 மே 2025 அன்று உயர்ஸ்தானிகருக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கடிதத்தை அனுப்பியது.

அதில் செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் இடம்பெற்ற ஈவிரக்கமற்ற மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

ஈழத்து வேடனின் பாடல் பல்கலைக்கழக பாடத்தில் இணைப்பு

ஈழத்து வேடனின் பாடல் பல்கலைக்கழக பாடத்தில் இணைப்பு

முக்கிய கடிதங்கள் 

அண்மையில் செம்மணி புதைகுழியிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, பச்சிளங்குழந்தைகள் உட்பட உடைகள் நீக்கப்பட்ட 17 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

செம்மணியில் புதையுண்டு இருக்கும் தமிழர்களின் பெருந்துயரம்.. பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்துள்ள கோரிக்கை | Chemmani Mass Grave Uk Tamil Forum

இதனால் உயர்ஸ்தானிகர் வோர்கர் துர்க், செம்மணிக்கு நேரில் சென்று பார்த்து, பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி தகவல்களை உறுதிப்படுத்தி நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதென்பது தவிர்க்க முடியாததாகும். இந்தத் தருணத்தில் பிரித்தானியா தமிழர் பேரவை உயர்ஸ்தானிகருடன் மேற்கொண்டிருந்த சில தொடர்பாடல்களை மீண்டும் வலியுறுத்துவது இன்றியமையாததாகும்.

கடந்த 2024 ஜூலை 22 திகதியிட்ட கடிதம் 

ஐ.நா. நிறுவனங்களின் பெரும் தோல்வியை எச்சரித்து, "இலங்கை மாதிரி" (Sri Lankan Model) என்பது இரக்கமற்ற நாடுகள் நீதியின் பிடியிலிருந்து தப்பிக்க பயன்படுத்தும் ஒரு சர்வதேச முன்னுதாரணமாக மாறியுள்ளது.

இது இலங்கையை அதன் "மோசமான மாதிரியிலிருந்து" (bad model) ஒரு "நல்ல மாதிரியாக" மாற்ற வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மற்ற நாடுகள் "இலங்கை மாதிரி" என்ற மூலோபாயத்தினை பின்பற்றுவதற்கு ஒரு தடையாக (deterrence) அமையும்.

செம்மணியில் புதையுண்டு இருக்கும் தமிழர்களின் பெருந்துயரம்.. பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்துள்ள கோரிக்கை | Chemmani Mass Grave Uk Tamil Forum

2024 செப்டம்பர் 16 திகதி மின்னஞ்சல் - 2024 செப்டம்பரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கான மந்தமான முன்னேற்றம் குறித்து தமிழ் மக்களின் கவலைகளை வெளிப்படுத்துகின்றது.

10 மார்ச் 2025 திகதியிடப்பட்ட கடிதம் 

NPP (JVP) தலைமையிலான புதிய அரசாங்கத்தைக் குறிப்பிட்டு, அதன் சிங்கள அடிப்படை வாதக் கொள்கைகளை மேற்கோள் காட்டி, இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பாதையை அமைப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகின்றது.

27 மே 2025 திகதியிடப்பட்ட கடிதம் 

பிரித்தானிய தமிழர் பேரவையானது உயர்ஸ்தானிகரின் 2025 ஜூன் விஜயம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போதும், உள்நாட்டு போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும், போரில் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையைக் காணவும், முள்ளிவாய்க்கால் மற்றும் செம்மணி ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.

செம்மணியில் புதையுண்டு இருக்கும் தமிழர்களின் பெருந்துயரம்.. பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்துள்ள கோரிக்கை | Chemmani Mass Grave Uk Tamil Forum

தற்போதைய இலங்கை அரசாங்கம் "சுத்தமான இலங்கை " என்ற போர்வையில் மனித உரிமைகளை மதிப்பதில் நீதியான பாதையை எடுத்து வருகிறது என்ற பொதுவான கருத்தை ஏற்று உயர் ஸ்தானிகர் அல்லது சர்வதேச சமூகம் ஏமாறக் கூடாது. ஐ.நா. தகவல் களஞ்சியத்தில் (UN Repository) ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட உண்மை தகவல்கள் மற்றும் சாட்சியங்களை ஆராய்ந்து சாதுர்யமாக கையாள வேண்டும்.

தற்போதைய NPP அரசாங்கம் அதன் உள்ளக குற்றவியல் வழக்கு விசாரணை பொறிமுறையின் மூலம் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வழங்கும் என்று நம்பி ஐ.நா. அமைப்புகளும் சர்வதேச சமூகமும் தங்களை கைவிட்டு விடுமோ என்று தமிழ் மக்கள் கவலைப்படுகிறார்கள்.

செம்மணியில் புதையுண்டு இருக்கும் தமிழர்களின் பெருந்துயரம்.. பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்துள்ள கோரிக்கை | Chemmani Mass Grave Uk Tamil Forum

பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தபடுத்திய ஐ.நா. உயர்ஸ்தானிகரின் கலந்தாலோசனைகள், செப்டெம்பரில் வரவுள்ள OSLAP இன் இறுதி அறிக்கை மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களுடன், 2025 செப்டம்பரில் நடைபெறவிருக்கும் 60வது UNHRC அமர்வு, தமிழர்களுக்கு நீதி, தீவுக்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை வழங்குவதற்கான பாதையை வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

முக்கிய குறிப்புகள்:

இலங்கையின் கொலைக் களங்கள் (Killing Fields), மனிதப் புதைகுழிகள் (Mass Graves), மறைக்கப்பட்ட சித்தரவதை மையங்கள், சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியம் போன்றனவற்றை உலக சமுதாயம் கவனிக்கச் செய்வதற்கான உயர்ஸ்தானிகருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இது.

இலங்கையின் கடந்த 77 ஆண்டுகால வரலாற்றின் அடிப்படையில், சர்வதேச குற்றவியல் நீதி பொறிமுறையால் (international criminal justice mechanism) மட்டுமே மோதலின் வடிவங்களையும் மூல காரணங்களையும் அடையாளம் காண முடியும் என்பதையும், இலங்கையில் தேவையான கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வன்முறை சுழற்சி மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய முடியும் என்பதையும் ஐ.நா மற்றும் பிற சர்வதேச சமூகங்கள் ஒப்புக் கொள்ளும்” என குறிப்பிட்டுள்ளது. 

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US