யாழ். செம்மணியில் இன்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகள்
யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எவ்வித எலும்பு கூட்டுத் தொகுதிகளும் அடையாளம் காணப்படவில்லை.
செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 22 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
05 எலும்பு கூட்டு தொகுதிகள்
இதன்போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றையதினம் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 31 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் போது, இன்றைய தினத்துடன் 95 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ ஏ ஆனந்தராஜா வின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணி தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை 101 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன நாளையதினமும் அகழ்வுப்பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 101 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 95 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.














சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
