செம்மணி மனிதபுதைகுழி: காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணுமாதிரிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தல்

Parliament of Sri Lanka Thurairajah Raviharan chemmani mass graves jaffna
By Shan Aug 05, 2026 09:12 AM GMT
Report

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (05.08.2026) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

அகழ்வாய்வுப் பணிகள்

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஆகஸ்ட் 04ஆம் திகதி நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் இதுவரை மொத்தம் 483 மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன. அவற்றில் 481 மனித எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதபுதைகுழி: காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணுமாதிரிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தல் | Chemmani Human Burial Site Investigation

எனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒப்புதலுடன் அவர்களின் மரபணுக்களைச் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். மனிதப்புதைகுழி விடயத்தில் அடையாளங்காணப்பட்ட எலும்புத்தொகுதிகளை நிலத்திலிருந்து அகழ்ந்தெடுப்பதென்பது முதற்கட்ட செயற்பாடாகும்.

அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதிகளின் கால எல்லை 

அதன் பிற்பாடு என்பு மாதிரிகளை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்வது இரண்டாவது நடவடிக்கையாகும். அதனைத்தொடர்ந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதிகளின் கால எல்லை தொடர்பில் தொல்லியல் திணைக்களம் அறிவியல் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிப்பார்கள். மூன்றாவது கட்டமானவே காணாமல்போன உறவுகள் தொடர்பான தேடுதல் விவகாரங்கள் ஆரம்பமாகும்.

யாராவது தங்களுடைய உறவினர்கள் குறிப்பிட்ட காலத்தில் காணாமல்போனதாகவோ அல்லது, கைதுசெய்யப்பட்டதன் பிற்பாடு இருப்பிடம் தெரியவில்லை என்றோ முறைப்பாடு வழங்கியிருந்தால், தொல்லியல் திணைக்களம் கணித்துள்ள காலப்பகுதியோடு அந்தத் தரவுகளை ஒப்பிட்டு பாதிக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஆய்வுசெய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு உள்ளது.

செம்மணி மனிதபுதைகுழி: காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணுமாதிரிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தல் | Chemmani Human Burial Site Investigation

ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணுக்களைச் சேகரித்து அதனைப் பாதுகாக்கும் காப்பகம் எதுவும் இதுவரை உருவாக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் பங்கேற்கின்ற சட்டத்தரணிகளில் ஒருவரான ரனித்தா ஞானராசா அவர்களும் அண்மையில் இதுதொடர்பில் வலியுறுத்தியிருக்கின்றார். எனவே இதுதொடர்பிலும் கவனஞ்செலுத்தப்பட வேண்டுமென இவ் உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார். 

நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவர் மனைவியும்..!

நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவர் மனைவியும்..!

தீவிரமடையும் நோய் பரவல் - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

தீவிரமடையும் நோய் பரவல் - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US