சாணக்கியனின் சவாலுக்கு பிள்ளையான் பதிலடி!
நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவரை எதற்காக விவாதத்துக்கு அழைப்பதென்பது, நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியனுக்கு தொியவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினா் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொிவித்துள்ளாா்.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளா் சந்திப்பில், ராசமாணிக்கம் சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ள விவாதம் தொடர்பிலேயே பிள்ளையான் எமது செய்திச்சேவைக்கு இந்தக் கருத்தை வெளியிட்டாா்.
மட்டக்களப்பு சந்திவெளியில் உள்ள தமது காணி அரசக் காணி என்று பிள்ளையான் தரப்பினா் கூறிவருகின்றனா்.
எனினும் அதனை மறுப்பதாக கூறிய சாணக்கியன், பிள்ளையான் தற்போது வசிப்பது தமது வீடு என்று தெரிவித்திருந்தாா்.
இது குறித்து ஊடகம் ஒன்றின் அனுசரணையுடன் விவாதிக்கத் தயாா் என்றும் சாணக்கியன் குறிப்பிட்டிருந்தாா்.
இது தொடா்பிலேயே எமது செய்திச்சேவை சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடா்புக்கொண்டு வினவியது.
எனினும் சிறுபிள்ளைத்தனமாக விடயங்களுக்கு பதிலளிக்க தாம் தயாரில்லை என்று சந்திரகாந்தன் கூறினாா்.
You may like this
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam