மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவிற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த கதி..!
மன்னார் - மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று(01.08.2026) இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் 06ஆம் திகதி மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தற்போது மடு திருத்தலத்தில் வந்து தங்கியுள்ளனர்.
தலைகவசம் அணியாமல் சென்ற இளைஞர்
அந்த வகையில் மடு திருத்தலத்திற்கு வருகை தந்து தங்கியிருந்த முத்தரிப்புத்துறையை சேர்ந்த 18 வயதுடைய அந்தோனி ஜெரோம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மடு ரோட் சந்தி - பள்ளமடு சந்தி வீதியில் மடுத்திருத்தல பகுதியில் மோட்டார் சைக்கிளை தலைக்கவசம் அணியாமல் செலுத்தி சென்று கொண்டிருந்த போது வீதி தடையை கடக்க முற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தூக்கி எறிந்ததில் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri