மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதல்! சிறையிலிருந்து தப்பிக்க கைதிகள் முயற்சி
மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக சிறைக்கைதிகளின் ஒரு பிரிவினர் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறைச்சாலைக்குள் கைதிகள் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொள்வதாகவும் அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள சுவரை உடைக்க கைதிகள் முயற்சிப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறையிலிருந்து தப்பிக்க முயற்சி
இதற்கிடையில், கைதிகள் அடங்கிய மற்றொரு குழுவினர் 15 அடி உயரத்தகட்டை அகற்றிவிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயன்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதல் மற்றும் பதற்றகரமான நிலைமையால் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் சிறைச்சாலை முன்பாகவும், சிறைச்சாலையை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டனர்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri