EPF சட்டத்தில் புதிய மாற்றங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய்வூதிய உரிமையற்ற ஊழியர்களுக்கான சமூகப்பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்ட வரைஞருக்கு ஆலோசனை
1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கை மத்திய வங்கி இதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன், தொழில் திணைக்களம் ஆரம்ப வரைவை தயாரித்துள்ளது.
இதற்கமைய, ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்க சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குமாறு தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.