மக்களுக்காக ரௌடிதனம் செய்யவும் தயங்கமாட்டேன்! அமைச்சர் சந்திரசேகர் பகிரங்கம்
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (17) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மக்களின் நிம்மதியை சீர்குலைத்தவர்கள், தற்போது நடுங்க ஆரம்பித்துள்ளனர். சந்திரசேகரன் ரௌடி எனவும் கூறத்தொடங்கியுள்ளனர். என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி தான்.
மக்களுக்காக செயற்படுகின்றபோது, மக்களுக்காக குரல் கொடுக்கின்றபோது, மக்களுக்காக எம்மை அர்ப்பணிக்கின்றபோது அதை பார்த்து ரௌடித்தனம் என்கின்றனர்.
இதுதான் ரௌடித்தனம் எனில் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார். கடந்தகாலங்களில் ரணில் விக்ரமசிங்கவின் பைல்களை தூக்கி திரிந்தவர்கள்தான் இப்படி சொல்கின்றனர்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டபோது அதனை வரவேற்றவர்கள், இன்றைக்கு தாங்கள்தான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் அர்ப்பணிப்புமிக்க தலைவர்கள் எனக் கூறிக்கொள்கின்றனர்.
தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் துரோகி முத்திரை குத்தப்பட்டவர்கள் இவர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
