தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நல்லவர்களுக்கு சம்பிக்க விடுத்துள்ள அழைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நல்லவர்கள் உள்ளனர். நாட்டை மீட்பதற்கான பயணத்தில் அவர்களும் இணைய வேண்டும் என 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளரும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தி வருகின்றது. ஜூலை முதல் வாரமளவில் ஆரம்பக்கட்ட இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

| விரைவில் இலங்கை அரசியலில் நிகழப்போகும் மாற்றம்! புதிய கட்சி தொடர்பில் சம்பிக்க தகவல் |
நாட்டை மீட்க மாற்றுத்திட்டம்
ஆனால், அதன்மூலம் அனைத்துப் பிரச்சினைகளும் தீராது. சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் நகர்வுகள் தோல்வி அடைந்தால், நாட்டை மீட்பதற்கான மாற்றுத் திட்டத்தை முன்வைக்க நாம் தயார்.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்படப் பல கட்சிகளில் நல்லவர்கள் உள்ளனர். அவர்களும் நாட்டை மீட்பதற்கான பயணத்தில் இணைய வேண்டும். நபர்கள் முக்கியம் அல்ல. நாடுதான் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam