மாவீரர் நினைவு நாளில் மதுபானசாலைகளை மூடுமாறு தவிசாளர் கோரிக்கை
மாவீரர் நாளின் புனிதத் தன்மையைப் பேணும் வகையில் மதுபானசாலைகளை மூடி, களியாட்ட நிகழ்வுகளையும் நிறுத்துமாறு கரைச்சி பிரதேச சபை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் நேற்றைய தினம் (25.11.2026) பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரைநாள் விடுமுறைக்கான கோரிக்கை
மாவீரர் நாளின் புனிதத் தன்மையைப் பேணும் வகையில், அந்த நாட்களில் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும், அன்றைய தினம் மதுபானசாலைகளை மூடுவதுடன், வர்த்தக நிலையங்களையும் மூடி அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக ஒத்துழைக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அன்றைய நாளில் ஆடைத் தொழிற்சாலைகளின் பணியாளர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கி, அவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தவிசாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.