மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு
மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரானும் பிரதி தவிசாளராக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தின் குரூஸும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று(24) காலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவல் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதன்போது, சபையில் உள்ள 22 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.
தவிசாளர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவலுக்கு ஆதரவாக 09 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரானுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் அழிக்கப்பட்ட நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அவருக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தியும் ஆதரவு தெரிவித்திருந்தது. இந்நிலையில், உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது, உப தவிசாளர் தெரிவிற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன.
உப தவிசாளர்
இதன்போது 22 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.
இதன்படி, ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸிற்கு 15 வாக்குகளும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீனுக்கு 07 வாக்குகளும் அழிக்கப்பட்ட நிலையில் மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இவருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சுயேட்சைக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 21 மணி நேரம் முன்

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri
