தொடருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
புதிய இணைப்பு
பிரதான மார்க்கத்தில் தொடருந்துகளை இயக்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத் தகவலை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெயங்கொடை மற்றும் பல்லேவெல தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு – பதுளை மார்க்கத்தில், கினிகம ஹில்லோயாவிற்கு இடையில் இன்று தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

தொடருந்து பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதன் காரணமாகவே போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து தடை

இதனால் இன்று (08.11.2023) தொடருந்து சேவையில் தடைப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பண்டாரவளை தொடருந்து நிலைய ஊழியர்கள் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam