எதிர்வரும் 13ஆம் திகதி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான புதிய தகவல்
மத்திய மாகாணத்தையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி ஊவா மாகாண தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் பாலித்த மஹிந்தபால தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாற்று தினம் ஒன்றில் குறித்த பாடசாலைகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பெற்றோர்கள் உள்ளிட்ட பல தரப்புகளில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் பாலித்த மஹிந்தபால ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூலமான சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மேனக ஹேரத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
விசேட விடுமுறை
எதிர்வரும் 12ஆம் திகதி (12.11.2023) ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை. இதன் காரணமாகவே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், எதிர்வரும் 13ஆம் திகதியன்று வழங்கப்படும் விசேட விடுமுறைக்காக அந்த வாரத்தில் விடுமுறை தினத்தன்று பாடசாலையை நடத்துமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |