வேலை நிறுத்த போராட்டத்தினால் முடக்கப்பட்ட தபால் சேவை (Video)
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பூநகரி கிளிநொச்சி ஆகிய பிரதான தபாலகங்கள் மூடப்பட்டுள்ளது.
இதனால் மாதாந்த உதவி கொடுப்பனவை பெற வருவோர் மற்றும் தபால் சேவைகளை பெற்றுக்கொள்ள வருவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் புராதன தபாலகங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழிய தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கிலும் முடங்கிய தபால் சேவை
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல தபால் அலுவலகங்களிலும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தூரஇடங்களில் இருந்து வரும் தபால் சேவைகள் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து தபாலகங்களிலும் சேவைகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

அஞ்சலின் பாரம்பரியத்தை விற்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனும் கோசங்களை அடிப்படையாக வைத்தே இந்த தொழிற்சங்க முன்னணியினர் வேலை தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி-ருசாத்
இதேபோல் மன்னார் மாவட்டத்திலும் தபால் சேவைகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri