முன்னாள் அமைச்சர்கள் இருந்த சிறைச்சாலை தொகுதியில் கண்டெடுக்கப்பட்ட சாதனங்கள்
வெலிக்கடை சிறைச்சாலையின் முன்னாள் அமைச்சர்கள் இருந்த சிறைச்சாலை தொகுதியான 'K' தொகுதியில் இருந்து 06 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு தந்திரோபாயப் படையினரால் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், அங்கிருந்து கையடக்கத் தொலைபேசிகளுடன் கூடுதலாக, துணைச் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூறுக்கும் மேற்பட்ட கைதிகள்
இந்நிலையில், தொடர் தேடுதல் நடவடிக்கைகளில் சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை தொகுதியான 'K' தொகுதியில் மகிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ மற்றும் எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட கைதிகள் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
