திரைப்பட பாணியில் குற்றச்செயலில் ஈடுபட்ட பெண் கைது
குழந்தையின் விளையாட்டு பொம்மைக்குள் சூட்சுமமாக போதைப் பொருள் கடத்திய பெண் ஒருவர் சீதுவை பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதுவ ராஜபக்சபுர பகுதியில் சனிக்கிழமை(26) காலை பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள விடுதிகளை பொலிஸார் சோதனை செய்தபோது, ஒரு அறையில் இருந்து பெண்ணொருவர் குழந்தையொன்றுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பொம்மையை எடுத்துக் கொண்டு செல்ல முற்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணைகள்
அதன்போது, சந்தேகத்தின் அடிப்படையில் பொம்மையை பரிசோதித்ததில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் ஒரு மின்னணு தராசு ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அதனைடுயத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர பரிசோதனையில் குறித்த பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஐஸ் பைக்கற்றுக்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என்று தெரியவந்துள்ளதுடன், இவர் தனது குழந்தையைப் பயன்படுத்தி இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சீதுவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
