திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
திருகோணமலை மேன்முறையீட்டு நீதிமன்றில் திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று (12.03.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில், நீதிபதியான நீதியரசர் பிரேம்சங்கர் மற்றும் நீதியரசர் இராமக்கமலன் ஆகியோர் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
அத்துடன், இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதியரசர்கள் எதிர்தரப்பினரால் முன்வைக்கப்பட்ட சட்ட ஆட்சேபனையின் அடிப்படையில் குறித்த வழக்கினை தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னிலையான வழக்கறிஞர்கள்
மேலும், வழக்கில் வழக்காளி சார்பாக பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார், ஜனாதிபதி சட்டத்தரணி சத்தார் மற்றும் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

அதேவேளை, எதிராளிகள் சார்பில் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன், சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் மற்றும் சட்டத்தரணி கரிகாலன் ஆகியோரும் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam