இறுதி சடங்கிற்கு சென்று வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
கொழும்பு, பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் அரச பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் இன்று (12) உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை பகுதியை சேர்ந்த பொடிமணிகே என்ற எழுபத்திரண்டு வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாணந்துறையிலிருந்து மஹியங்கனை நோக்கிச்சென்று கொண்டிருந்த அரச பயணிகள் பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனைத்தொடர்ந்து பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்கு சென்று பொலன்னறுவைக்கு திரும்புவதற்காக பாணந்துறை மஹியங்கனை பேருந்தில் ஏறியபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
