மட்டக்களப்பில் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள பள்ளிவாசல்: சமூக ஆர்வலர் எச்சரிக்கை
மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மாப் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள வீதியானது பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் காரணமாக மட்டக்களப்பு வின்சென்ற் தேசிய பாடசாலைக்கு வரும் மாணவர்கள் காலையிலும் பாடசாலை விடும் நேரத்திலும் வீதியில் நெரிசலை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள நடைபாதையில் தேங்காய் மட்டைகள் கொண்டு குவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு கடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விபத்து ஏற்படும் அபாய நிலை
இதன் காரணமாக வீதியூடாக செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பாதசாரிகளுக்கு விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்தோடு, இதற்கு உடனடியாக வீதி அபிவிருத்தி அதிகார சபை உரிய தீர்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |