துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு
கொழும்பு - ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் பெண் ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திகதியிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(04.11.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்றம் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதெ ரணதுங்க முன்னிலையில் இன்று (04) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
இதன்போது, முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் கசகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐகுல் N. ரகசினா என்ற பெண்ணும் பிரதிவாதிகளாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், வழக்கை நவம்பர் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
2025 மே 20ஆம் திகதி வெள்ளவத்தை ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் உரிமம் இன்றி தங்க முலாம் பூசப்பட்ட ரி 56 ரக துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், குறித்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டி சட்டமா அதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.