ஜெர்மனியில் கோர விபத்து! போராட்டக்காரர்கள் மீது பாய்ந்த கார்
ஜெர்மனியின் முனீச் நகரில் இடம்பெற்ற போராட்டத்தில் கார் ஒன்று பாய்ந்தமையால் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
முனீச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், உலகத் தலைவர்கள் பலர் அங்கு பங்குபற்றியுள்ளனர்.
குறித்த நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இந்நிலையில், போராட்டக் களத்திற்குள் வேகமாக உட்புகுந்த கார், மோதியதில் 28 பேர் படுகாயமடைந்தனர்.
20 injured after car drives into #Munich crowd#AletihadNewsCenter #germany #accident pic.twitter.com/KFrFbNrT26
— Aletihad English (@AletihadEn) February 13, 2025
இதனையடுத்து, காரினை செலுத்திய 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஜெர்மனி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச மாநாடு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி ஜெர்மனியின் மாக்டேபர்க் நகரின் கிறிஸ்துமஸ் சந்தை கூட்டத்திற்குள் வேகமாக நுழைந்த காரில் மோதியதில் 5 பேர் உயிரிழந்ததோடு 200 பேர் வரை காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கிளீன் தையிட்டி..! 2 நாட்கள் முன்

பாக்கியாவிற்கு சம்பந்தியாகும் செல்வி- அடுத்தக்கட்டத்திற்கு சென்ற காதல்.. ஈஸ்வரி ஏற்றுக் கொள்வாரா? Manithan

வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: ஜேர்மனியில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் ஆச்சரிய முடிவுகள் News Lankasri
