அரச துறை தொடர்பில் எலான் மஸ்க்கின் தீர்மானம்: அதிர்ச்சியில் அமெரிக்கா
அமெரிக்க அரச துறையை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு அதனை புதிதாக உருவாக்க வேண்டும் என எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) தலைவராக எலான் மஸ்க்கை ட்ரம்ப் (Donald Trump) நியமித்துள்ளார்.
இந்த குழு அரசின் தேவையற்ற செலவை கண்டுபிடித்து அதனை கட்டுப்படுத்தும் வேலையை செய்து வருகின்ற நிலையில் எலான் மஸ்க் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச துறை மறுசீரமைப்பு
இது தொடர்பில், டுபாயில் நடைபெற்ற உலக அரசுத்துறை தொடர்பான உச்சி மாநாட்டில் பேசிய எலான் மஸ்க்,
“மக்களின் ஜனநாயக ஆட்சி முறைக்கு அரசுத் துறைகள் எதிராக இருக்கின்றன.
அரசுத் துறைகளில் ஆட்களை நீக்குவதற்கு பதில் ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டுச் சீரமைப்புகளுக்கு பின் அவற்றை புதிதாக உருவாக்கவேண்டும்.
வயல்களில் தேவையில்லாத களைகளை வேரோடு அகற்ற வேண்டும். இல்லையென்றால் அது மீண்டும் மீண்டும் வளரக்கூடும். அதேபோன்று தான் அரசுத் துறையும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்க அரசதுறை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து அவர்களை எலான் மஸ்க் வெளியேற்றி வரும் நிலையில், எலான் மஸ்கின் இந்த கருத்து அரசு ஊழியர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
