மியன்மாரின் மோசடி மையத்தில் சிக்கிய இலங்கையர் விடுவிப்பு!
மியன்மாரின் மோசடி மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது தாய்லாந்து இராணுவத்தின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைகள்
மியன்மாரின் கரேன் மாநிலத்தில் உள்ள தொலைத்தொடர்பு மோசடி மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்டோர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆயுதக் குழுவால் விடுவிக்கப்பட்டவர்கள் தாய்லாந்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுள் பலர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. அவர்கள் மனித கடத்தலுக்கு உள்ளானவர்களா? என்பதைக் கண்டறியும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
