நீதிமன்ற வளாகத்தில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்
நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற வேளை தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் கல்முனை தலைமையக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் இன்று அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக அழைத்து வரப்பட்டு விசாரணையின் பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த சந்தேக நபருக்கு பிணையாளிகள் இன்மையினால் நீதிமன்ற உள்ளக வளாகத்தில் உள்ள சிறை கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
தப்பி சென்ற நீதிபதி
அவ்வேளை சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பி நீதிமன்ற சுவர் மேல் குதித்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தப்பி சென்ற சந்தேக நபர் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் சுமார் 28 வயது மதிக்கத்தகக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்





பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
