மட்டக்களப்பில் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த அரசியல் கட்சி வேட்பாளர்!
மட்டக்களப்பு - ஓட்டுமாவடி மத்திய கல்லூரியில் அத்துமீறி நுளைய முற்பட்ட கட்சி ஒன்றி வேட்பாளரால் மாணவர் தலைவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில், தேர்தல் உதவி ஆணையாளரிடம் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலைக்குள் நுழைய முற்பட்ட குறித்த நபரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு தகாதவார்தை பிரயோகித்து பாடசாலை நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு, எதிராக கடந்த சனிக்கிழமை 26 ம் திகதி பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் உதவி ஆணையாளர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பில் பாடசாலை அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.
மாணவர் காலைக்கூட்டம்
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
பாடசாலை வழமைபோல காலை ஆரம்பிக்கும் போது தேசிய கீதம் மற்றும் காலை கூட்டம் இடம்பெற்றும் நிலையில், அப்போது பிந்திவரும் மாணவர்கள் காலைக்கூட்டம் முடியும்வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பதினமான கடந்த வெள்ளிக்கிழமை காலை பாடசாலை ஆரம்பித்து காலைக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது குறித்த நபர் அவரது குழந்தையை பாடசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பொலிஸார் விசாரணை
அங்கு பிந்தி வந்த மாணவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது குழந்தை உட்செல்ல வேண்டும் என பாடசாலை வளாகத்தினுள் அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளார்.
இதன்போது போது அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவர் தலைவர்களை தகாத வார்த்தை பிரயோகித்து தான் கட்சி ஒன்றின் வேட்பாளர் என தெரிவித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாடசாலை கல்வி நடவடிக்கைக்கு அச்றுத்தல் விடுத்த வேட்பாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்திலும் மாவட்ட தேர்தல் உதவி ஆணையார் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்புக்கும் பாடசாலை அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 9 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
