அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய தமிழர்! வெளிப்படையாக ஆதரித்த எலான் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி வேட்பாளருக்கு டெஸ்லா நிறுவுனர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
குடியரசுக்கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து போட்டியிடக்கூடாது என ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளமை அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான பரபரப்பான சூழ்நிலையில் போட்டியிடும் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி என்பவரை தற்போது டெஸ்லா நிறுவனர் எலான் மாஸ்க் வெளிப்படையாக ஆதரித்து, இரண்டாவது நாளாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
He states his beliefs clearly. https://t.co/SjpuXLCFpo
— Elon Musk (@elonmusk) August 18, 2023
விவேக் ராமசாமி பேசுவதில் ஆழமான கருத்திருப்பதாக குறிப்பிட்டிருந்த எலான் மஸ்க், தற்போது தனது நம்பிக்கையை அல்லது கொள்கையை தெளிவாக எடுத்துரைத்துள்ளார் எனவும் எலான் மஸ்க் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மருந்து நிறுவனத்தை நடத்தி வரும் 37 வயதான விவேக் ராமசாமி சிறந்த தொழிலதிபர் என்பதுடன், அவரின் சொத்து மதிப்பு ரூ.4,140 கோடி என்று கூறப்படுகின்றது.
அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட இவருக்கு குடியரசு கட்சியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
you may like this

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
