அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கிய தமிழர்! வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியானால் கொள்கைகள் மற்றும் தார்மீக அதிகாரத்துடன் அரசாங்கத்தை சிறந்த முறையில் வழிநடத்த தயாராகவுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
The corrupt administrative police state is a grave threat. If we want to move from being victims to victors, we need to actually solve the problem. The next President can do it: I will lead with principles & moral authority, not grievance & vengeance. That’s how we’ll finally… pic.twitter.com/Ox9OuD8YPk
— Vivek Ramaswamy (@VivekGRamaswamy) May 8, 2023
மேலும்,ஊழல் நிறைந்த நிர்வாக கட்டமைப்பு பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், அதனை முற்றிலும் இல்லாதொழித்து சிறந்த அரசாங்கத்தை உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து வெற்றியாளர்களாக மாற விரும்பினால், முதலில் சிக்கலை தீர்க்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
தற்போது அந்த வரிசையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியும் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட களமிறங்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.