கம்யூனிசப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே வெட்டி எறிய வேண்டும் என ட்ரம்ப் அறிவிப்பு!
நாட்டில் பரவி வரும் கம்யூனிசப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே வெட்டி எறிய வேண்டும்" என இடதுசாரி ஜனநாயகக் கட்சியினரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறைமுகமாகச் சாடினார்.
அமெரிக்காவில் தபால் மூலமான வாக்குப்பதிவுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், வாக்காளர் பதிவுக்குக் குடியுரிமைச் சான்றிதழைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர் நாடாளுமன்றத்தை வலியுறுத்தினார்.
ட்ரம்பின் நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட 'Freedom 250' குழுவினர், இந்த சுதந்திர தின விழாவை ஒரு மாபெரும் மாநிலக் கண்காட்சி போல மாற்றியுள்ளனர்.
அரசியல்மயமாக்கல்
இதற்குப் பல ஜனநாயகக் கட்சி மாநிலங்கள் மற்றும் கலைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து விழாவைப் புறக்கணித்தனர்.

அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்றில், பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்க மக்கள் நாட்டின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அளவுக்கு அதிகமாக அரசியல்மயமாக்கப்பட்டு விட்டதாகக் கவலை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri