மருந்து தட்டுப்பாடு குறித்து பேசுவது பயங்கரவாதமாக சித்தரிக்கப்படலாம்: மருத்துவர் எச்சரிக்கை
புதிய சட்டங்களின் கீழ் புற்றுநோய் மருந்து தட்டுப்பாடு குறித்து பேசுவது பயங்கரவாதமாக சித்தரிக்கப்படலாம் என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நிபுணத்துவ மருத்துவர் சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள புதிய சட்டமூலங்களின் தெளிவின்மையால், சுகாதாரத் துறையில் உள்ள ஊழல்கள், புற்றுநோய் மருந்து தட்டுப்பாடுகள் மற்றும் தரமற்ற மருந்துகள் குறித்துப் பேசுவது பயங்கரவாதச் செயலாகச் சித்திரிக்கப்பட்டு கைது செய்யப்படக்கூடிய ஆபத்து உள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சமூக ஊடகப்பதிவுகள் முடக்கம்
அத்துடன், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (போன்ற தொழிற்துறை மற்றும் சிவில் அமைப்புகளும் இதன் மூலம் பயங்கரவாத அமைப்புகளாக முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் குறைபாடுகளை வெளிக்கொணரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சமூக ஊடகப்பதிவுகள் முடக்கப்படுவதோடு, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளும் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்சக்களுக்கு நெருக்கமான நபர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் - பெண்ணின் வாக்குமூலத்தில் கசியவுள்ள இரகசியங்கள்