கனடாவில் பிரித்தானிய முடியாட்சிக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு
கனடாவில் பிரித்தானியாவின் முடியாட்சி முறைமைக்கு அதிகளவு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக வெளியிடப்படடுள்ள கருத்து கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
முடியாட்சிக்கான ஆதரவு வீழ்ச்சி
இரண்டாம் எலிசபெத் மஹாராணியின் மறைவின் பின்னர் கனடாவில் முடியாட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது.
பிரித்தானிய அரச குடும்பத்துடனான முடியாட்சி உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அநேக மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
முடியாட்சி தொடர்புகள் குறித்து மீளச் சிந்திப்பதற்கான காலம் மலர்ந்துள்ளது என கருத்துக்கணிப்பில் பங்கேற்ற சுமார் 60 வீதமான மக்கள் தெரிவித்துள்ளனர்.
முடியாட்சியின் கீழ் தொடர்ந்தும் இணைந்திருக்க விரும்புவதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 14 வீதமான கனேடிய மக்கள் மட்டும் கருத்து வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.