புதிய கனேடிய பிரதமரின் முதல் உரையிலேயே அமெரிக்காவிற்கு பதிலடி..!
கனடா ஒரு போதும் அமெரிக்காவின் பகுதியாக மாறாது என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தனது முதலாவது உரையில் தெரிவித்துள்ளார்.
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகலை தொடர்ந்து லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றிபெற்று இன்று (14) பிரதமராக பதவியேற்றுள்ளார்.
பிரதமராக பதவியேற்ற பின் அவர் ஆற்றிய முதல் உரையிலேயே அவர் அமெரிக்கா தொடர்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.
முதல் வெளிநாட்டுப் பயணம்
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாற்றுவேன் என தெரிவித்திருந்தார்.
BREAKING: New Canadian Prime Minister Mark Carney is very clear to Trump moments ago:
— Ed Krassenstein (@EdKrassen) March 14, 2025
“I’ve been clear, that we will never, ever, in any way, shape or form, be part of the United States. America is not Canada!” pic.twitter.com/1QSbBYABhf
இதற்கு, பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மார்க் கார்னி, அமெரிக்காவிடம் இருந்து மரியாதையை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு செல்ல இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
