அமெரிக்காவில் இவர்களுக்கு வரி இல்லை: நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றார்.
அதிலும் வரிவிதிப்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
1.50 லட்சம் அமெரிக்க டொலர்
அந்தவகையில் தற்போது அமெரிக்காவில், ஆண்டுக்கு 1.50 லட்சம் அமெரிக்க டொலர் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்ற நடைமுறையை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அமெரிக்க வணிகத்துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்(Howard Lutnick) தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 1.50 லட்சம் அமெரிக்க டொலருக்கு குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு எந்த வரியும் இருக்க கூடாது என்பதே ட்ரம்பின் இலக்கு. இந்த இலக்கை நிறைவேற்றவே பணியாற்றி வருகிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரி இரத்து
வரி ரத்து செய்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது, "அதை அமெரிக்கர்கள் அல்லாத மற்றவர்களை வைத்து ஈடு செய்வோம்" என அவர் பதிலளித்துள்ளார்.

முன்னதாக குடியரசு கட்சி எம்.பிக்கள் மாநாட்டில் பேசிய ட்ரம்ப், "அமெரிக்கா குடி மக்களுக்கு தனிநபர் வருமான வரி இரத்து செய்யப்படும்.
அதனால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு, இறக்குமதி பொருட்களுக்கும் அதிக வரி விதிக்கப்படும்" என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam