அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் நுழைவதற்கு தடையா! கல்வி பிரதி அமைச்சர் விளக்கம்
அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் நுழைவதைத் தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் நடவடிக்கை
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் பாடசாலைகளில் நடைபெற்ற விழாக்களில் கலந்துகொண்டனர். அதன் அடிப்படையில், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் நுழைவதற்கு தடை உள்ளதா என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர்.
இல்லையென்றால், அரசாங்க உறுப்பினர்கள் மட்டும்தான் இவ்வாறு செயல்பட முடியுமா எனவும் வினவினர்.
இது குறித்து கல்வி பிரதி அமைச்சர் பதிலளிக்கையில், அரசியல் நடவடிக்கைகளுக்கு பாடசாலைகளை பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
எனினும், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் நுழைவதைத் தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.





3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
