கனடாவின் புதிய பிரதமர் பதவியேற்பு!
கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி(Mark Carney) பதவியேற்றுள்ளார்.
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகலை தொடர்ந்து லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றிபெற்று இன்று (14) பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இதேவேளை தற்போதுள்ள அமைச்சர்களையே மார்க் கார்னி தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அமைச்சர்கள்
நிதியமைச்சர் டொமினிக் லெப்லாங்க், வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி மற்றும் தொழில்துறை அமைச்சர் பிரான்சுவா பிலிப் ஷாம்பெயின் ஆகிய முக்கிய அமைச்சர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் திகதி பதவி விலகினார்.
அவரே லிபரல் கட்சியின் தற்போதைய தலைவராகவும் பதவி வகிக்கும் சூழலில், லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றிபெற்றார்.
இதையடுத்து, கனடாவின் 24ஆவது பிரதமராகவும் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam