கனடாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயானது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மாகாணத்தில் திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா முழுதும்அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எண்ணிக்கை அதிகரிப்பு
மேலும், கனடாவின் மேற்கு கெலோனா நகரத்தில் தீயானது வேகமாக பரவி வருவதால் 2,400 வீடுகளில் வசிக்கும் சுமார் 36,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் எல்லோ-நைஃப் நகரத்தை நோக்கியும் தீ வேகமாக பரவி வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் விமானங்கள் ஊடாக வெளியேறி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தீப்பரவல் காரணமாக வெளியேற்றப்படுவோரின் எண்ணிக்கை அதிகப்படும் எனவும், சுமார் 15,000 - 20000 வீடுகளில் வசிப்போர் உடனடியாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.