யாருமே நெருங்க முடியாத ஈரானின் நிலக்கீழ் தளங்கள்: தகர்க்க விரும்பும் அமெரிக்காவின் அதிரடித் திட்டங்கள்!!
பல நூற்றாண்டுகளாகவே எதிரிகளிடம் இருந்து ஈரானைப் பாதுகாக்கின்ற அரண்களாக இருந்துவந்த முக்கியமான இரண்டு மலைத் தொடர்கள், இன்று ஈரானின் மற்றொரு முக்கிய நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதாவது, ஈரானின் ஏவுகணைகளையும், விமானங்களையும், ஈரானின் ஆணு செறிவுட்டும் நிலைகளையும், பாதுகாக்கின்ற மிக முக்கியமாக காரியத்தை, இந்த இரண்டு மலைத் தொடர்கள்தான் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றன.
இந்த மலைத் தொடர்களின் கீழே 100 மீற்றர் ஆழத்தில் மிகப் பலமான, பாதுகாப்பான 50 நிலக்கீழ் தளங்களை அமைத்து, அந்தத் தளங்களில்தான் ஈரான் தனது அத்தனை ஆயுதங்களையும், விமானங்களையும் பாதுகாப்பாக வைத்துள்ளது.
இன்று அமெரிக்காவிடம் இருக்கின்ற எந்த ஒரு குண்டுகளினாலும் தகர்க்கமுடியாதவாறு தமது நிலக்கீழ் தளங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றார்கள் ஈரான் தலைவர்கள்.
ஆனால் சில யுக்திகளைப் பாவித்தால், அமெரிக்காவினால் அந்தத் தளங்களை அழிக்கமுடியும் என்று கூறுகின்றது Centre for Strategic and International Studies என்ற சர்வதேச அமைப்பு.
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்: