பழிவாங்கப்பட்டுள்ள நீதிபதி இளஞ்செழியன்! அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல் என குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Tamils Anura Kumara Dissanayaka Sri Lanka Magistrate Court Sri Lanka Government
By Theepan Jan 22, 2025 03:27 PM GMT
Report

மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு, நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (22.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன், முன்னாள் வடக்கு மாகண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இளஞ்செழியனுக்கு அநீதி

இது தொடர்பில் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,


“இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய நீதிபதி இளஞ்செழியனுக்கு பாரபட்சமான வகையில் இந்த அரசு பதவி உயர்வு வழங்காது பழிவாங்கியுள்ளது. இதை ஏற்க முடியாது.

பழிவாங்கப்பட்டுள்ள நீதிபதி இளஞ்செழியன்! அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல் என குற்றச்சாட்டு | Judge Ilanchezhiyan Unfairly Sidelined Anura Gov

நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில் பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கியதால் இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார். ஆனால் அவருக்கான பதவிகள் அந்தந்தக் காலகட்டத்தில் வழங்கப்படாது அரசுகளால் திட்டமிட்ட வகையில் தட்டிக்கழிக்கப்பட்டு வந்தது.

இதன் உச்சமாக தற்போது அநுர அரசும் தகுதிகள் அனைத்தும் இருந்து திட்டமிட்டு அவரது பதவி உயர்வை தடுத்து ஓய்வு நிலைக்கு தள்ள முயற்சித்துள்ளது. இதை எமது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அந்தவகையில் அரசு குறித்த பழிவாங்கலை கைவிட்டு அவரது பதவி உயர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

இதேநேரம் அவ்வாறான சூழலை அரசு உருவாக்காது விட்டால் சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து வீதிக்கு இறங்கி போராடும் நிலை வரும் எனவும் தெரிவித்துள்ளனர். 

டொலருக்கு எதிராக ரூபாவின் இன்றைய பெறுமதி

டொலருக்கு எதிராக ரூபாவின் இன்றைய பெறுமதி

அநுர அரசு

இந்நிலையில் குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் கூறுகையில்,

பழிவாங்கப்பட்டுள்ள நீதிபதி இளஞ்செழியன்! அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல் என குற்றச்சாட்டு | Judge Ilanchezhiyan Unfairly Sidelined Anura Gov

கடந்த காலங்களில் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் ஜேவிபி செய்த செயற்பாடுகள் அனைத்தையும் எமது மக்கள் நன்கு அறிவார்கள். அதே நேரம் அவர்கள் தமிழ் மக்களை ஒரு பொருட்டாக கண்டுகொள்ள விரும்புவதில்லை.

அவ்வாறான தரப்பினர் இன்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கிளீன் ஸ்ரீலங்கா என்று கூறி தமிழ் மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்றது. மறைமுக பழிவாங்கல் போக்குடனும் செயற்படுவதாக மக்கள் கூறுவதை காண முடிகின்றது.

ஆனால் ஆட்சியை கைப்பற்ற அநுர தரப்பு மக்களுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அத்துடன் தென்பகுதியைப் போன்று தமிழ் மக்களையும் அவரவர் தகுதிகளுக்கேற்ப பதவி நிலைகளில் பாரபட்சம் பாராது நியமிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.

செல்வம் அடைக்கலநாதனின் கடவுச்சீட்டு விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

செல்வம் அடைக்கலநாதனின் கடவுச்சீட்டு விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US