மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்ததில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் பலி
மெக்சிகோவின்(Mexico) வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் பலத்த காற்று வீசியதால் குடிமக்கள் இயக்கம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெசின் பிரசார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அமைப்புகள் சரிந்து விழுந்துள்ளது.
குறித்த விபத்தானது நேற்று(22.05.2024) இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
இந்த இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இடிபாடுகளில் படுகாயமடைந்தவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழு மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மெக்சிகோவில் வரும் ஜூன் 2 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |