மட்டக்களப்பில் நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து போராட்டம்
நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி போராளிகள் நலன்புரிச் சங்கத்தினால் மட்டக்களப்பில் கையெழுத்துப் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் நேற்றையதினம்(11.01.2025) சனிக்கிழமை(11.01.2025) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்றுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, நீண்ட காலமாகவும், சில வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து இந்த போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திடம் கோரிக்கை
வடக்கு கிழக்கு தழுவிய கையெழுத்துக்களைச் சேகரித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமும், சட்டமா அதிபரிடமும் கையளிக்கவுள்ளதாக போராளிகள் நலன் புரிச்சங்கத்தினர் இதன்போது தெரிவித்துள்ளனர்.
தமது இந்தச் செயற்பாட்டின் மூலம் எதிர்வரும் சுதந்திர தினத்திலாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் போராளிகள் நலன் புரிச்சங்கத்தினர் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |