திடீரென 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய பேருந்து: இருவர் வைத்தியசாலையில் அனுமதி
ஹங்குரன்கெத்தவிலிருந்து (Hanguranketha) லுல்கந்துர வரை ஆடைத்தொழிற்சாலையின் பணிப்பெண்களை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று வீதியை விட்டு விலகி சுமார் 40 அடி உயரத்திற்கு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இரு ஆடைத்தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேருந்தில் சுமார் நாற்பது பணிப்பெண்கள் பயணிப்பதாகவும், இந்த பேருந்து விபத்துக்குள்ளானபோது இரண்டு பணிப்பெண்கள் மட்டுமே அதில் பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரும் விபத்து தவிர்ப்பு
தினமும் 40 பணிப்பெண்களை ஏற்றிச்செல்லும் இந்த பேருந்தில் விபத்தின் போது பெரும்பாலான பணிப்பெண்கள் பேருந்தில் இருந்து கீழே இறங்கியிருந்ததுடன், பேருந்து கவிழ்ந்த போது இரண்டு பணிப்பெண்கள் மாத்திரமே பேருந்திற்குள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்தில் பெரும்பாலான பணிப்பெண்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam