ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக செல்லும் படையினருக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் அன்பளிப்பு
ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிகளுக்காக புறப்பட்டுச் செல்லவிருக்கும் படையினருக்கு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் சார்பில் குண்டுதுளைக்காக இரண்டு வாகனங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
ஐ.நா. அமைதி படை பணிகளுக்காக இலங்கையில் இருந்து மேலும் 1,132 பேர் கொண்ட படையினர் குழுவொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த படைபணியில் இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
இந்தக் வன்முறை ஒழிப்புப் படையில் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 900 இராணுவ படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 189 அதிகாரிகள் மற்றும் நாட்டின் இராணுவ வரலாற்றில் முதல் முறையாக நிலக்கண்ணிவெடிகள் மற்றும் மரணப் பொறிகளை செயலிழக்கச் செய்வதில் சிறப்புப் பயிற்சி பெற்ற 43 பெண் இராணுவ சிப்பாய்கள் உள்ளடங்கியுள்ளனர்.
அமைதிகாக்கும் பணி
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து ஒரே தடவையில் புறப்பட்டுச் செல்லும் மிகப்பெரிய குழு இதுவாகும்.தற்போதைக்கு அவர்கள் பனாகொடை ராணுவ முகாமில் விசேட பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது ஹைட்டி நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சீர்செய்து, அந்நாட்டில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், இலங்கை அரசாங்கம் இந்த அமைதிகாக்கும் படைப்பிரிவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஹைட்டி நாட்டிற்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா. அமைதி படை பணிகளுக்காக இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ள படையணியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அண்மையில் பனாகொடையிலுள்ள இலங்கை காலாட்படைப் பிரிவு தலைமையகத்திற்கு நேரில் சென்றிருந்தார்.
வாகனங்கள் அன்பளிப்பு
அதனையடுத்து குறித்த படையணிக்கு ஹைட்டி அமைதி காக்கும் நடவடிக்கைகளின் போது பயன்படுத்துவதற்காக குண்டுதுளைக்காத இரண்டு விசேட வாகனங்கள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, கவச வாகனங்கள், இலங்கையில் தயாரிக்கப்பட்ட 'யுனி பபல்'ரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ தளபாடங்களும் இந்தப் படைப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan