தகவலறியும் ஆணைக்குழுவுக்கு புதிய ஆணையாளர்கள் விரைவில் நியமனம்
தகவலறியும் ஆணைக்குழுவில் வெற்றிடமாக உள்ள ஆணையாளர் பதவிகளுக்கு விரைவில் நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று வெகுசன ஊடகத்துறை பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது தகவலறியும் ஆணைக்குழுவில் பல்வேறு நெருக்கடிகள் நிலவுகின்றது. அதன் ஆணையாளர்களுக்குப் போதுமான கொடுப்பனவு இல்லாமை, போதுமான அதிகாரிகள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விசேட வைத்திய நிபுணர்கள் கட்டணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு! வைத்திய நிபுணர் முன்வைக்கும் குற்றச்சாட்டு
ஆணையாளர்களின் கொடுப்பனவு
அத்துடன் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், இதுவரை காலமும் தகவலறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முடக்கும் வண்ணமாகவே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

இது தொடர்பான விடயங்கள் குறித்து கருத்து வினவியபோது வெகுசன ஊடகத்துறை பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தகவலறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர்களுக்கான கொடுப்பனவு போதுமானதாக இல்லை என்பதை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.
அதன்படி, மற்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு இணையாக இதன் ஆணையாளர்களின் கொடுப்பனவும் உயர்த்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
தேவையான அனைத்து வசதிகளும்
மேலும் அதை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தகவலறியும் ஆணைக்குழுவிற்கான உரிய அதிகாரிகளை நியமிப்பதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்பிரகாரம் வரவிருக்கும் ஆட்சேர்ப்புகளை விரைவில் முடிப்போம் என்று நம்புகிறோம்.

தகவலறியும் ஆணைக்குழுவிற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.
இங்கு குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், தகவலறியும் ஆணைக்குழுவை டிஜிட்டல் மயமாக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இது தகவலறியும் ஆணைக்குழுவின் பணிகளை மிகவும் வெளிப்படையான மற்றும் திறமையான முறையில் மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் என்றும் வெகுசன ஊடகத்துறை பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri