பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகம் மீது சைபர் தாக்குதல்
பிரித்தானிய(UK) இராணுவத்தின் தனிப்பட்ட தகவல்கள் சைப்பர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராணுவத்தின் உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களை சைப்பர் தாக்குதல் மூலம் திருடப்பட்டதை அவதானித்ததாக பிரித்தானிய தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் தாக்குதல்களுக்கான பின்னணி தொடர்பில் பிரித்தானியா எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
சீன சைபர் தாக்குதல்
பாதுகாப்பு அமைச்சகம் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு ஊதிய முறையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் சீன(China) சைபர் தாக்குதலுக்கான அனைத்து அடையாளங்களும் இருப்பதாக முன்னாள் அந்நாட்டின் இராணுவ வீரரும், நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் முன்னாள் தலைவருமான டோபியாஸ் எல்வுட் கூறியுள்ளார்.
ஊதிய முறையின் பெயர்கள் மற்றும் சேவை பணியாளர்களின் வங்கி விவரங்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பெயர்கள், வங்கி விவரங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சேவையில் உள்ள மற்றும் முன்னாள் ஆயுதப்படை உறுப்பினர்களின் தனிப்பட்ட முகவரிகள் திருடப்பட்டதாக பிரித்தானிய தரப்பால் நம்பப்படுகிறது.
எனினும், இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என்றும் அனைத்து வகையான சைபர் தாக்குதல்களை எப்போதும் கடுமையாக எதிர்க்கிறது என்றும் சீனா தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
