பிரித்தானிய இளவரசி வைத்தியசாலையில் அனுமதி
பிரித்தானிய(United Kingdom) இளவரசி ஏன்(Anne) குளோசெஸ்டர்ஷையரில், இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறு காயங்கள் மற்றும் மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
73 வயதான இளவரசி ஏன்(Anne) தனது காட்கோம்பே பார்க் தோட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு முழு மற்றும் விரைவான குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை குறிப்பிட்டுள்ளது.
காயத்திற்கான காரணம்
கண்காணிப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் பிரிஸ்டலில் உள்ள சவுத்மீட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை,
எனினும், அவரின் காயங்கள் குதிரை ஓட்டத்தின் போது குதிரையின் தலை அல்லது கால்களின் தாக்கத்தினால், ஏற்பட்டவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அத்துடன் இளவரசி ஏன், இந்த வார இறுதியில் கனடாவுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கவிருந்ததாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri