கனேடிய மாகாணமொன்றில் பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ள நீர் பயன்பாடு
கனடாவின்(Canada) அல்பேர்ட்டா மாகாணத்தின் கல்கரியில் நீர் பயன்பாட்டில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நீர்த்தட்டுப்பாட்டின் காரணமாக கல்கரியில் அவசரநிலைமை அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதிகரிக்கும் வெப்பநிலை
கல்கரியில் நேற்றைய தினம் 451 மில்லியன் லீட்டர் நீர் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, நீர் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நகர முதல்வர் ஜொயொட்டி கொன்டெக் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் நகரின் இரண்டு இடங்களில் சுத்திகரிக்கப்படாத நதி நீர் விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |