வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்
இலங்கை (Sri Lanka) சிறையில் உள்ள படகுகளையும் கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (22) கடற்றொழிலில் ஈடுபவதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 600க்கு மேற்பட்ட விசைபடகுகளில் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்றனர்.
வருவாய் இழப்பு
இந்த நிலையில் நெடுந்தீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது
அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக ஒரு
குற்றச்சாட்டை முன்வைத்து மூன்று விசைப்படகுகளையும் அதில் இருந்த 22 கடற்றொழிலாளர்களையும் கைது
செய்து சிறையில் அடைத்தனர்.
@tamilwinnews வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் #Lankasrinews #Tamilwinnews #Srilanka #Tamilnadu ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
இந்த நிலையிலேயே இலங்கை சிறையில் உள்ள படகுகளையும் கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன் நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5000 மேற்பட்ட கடற்றொழிலைச் சார்ந்தவர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகி வருகின்றது.
மேலதிக தகவல் - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |